என் கனவுகளின்
நினைவலையாய்
என் கண் முன்னே வந்தவளே!
உன்னால் என் நினைவுகளும்
இப்பொழுது கனவுகளாய்!
மற்ற யாரோடும் பேசாமல்
என்னோடு மட்டும்
பேசிய போது
உணர்ந்தேன் நம் காதலை!
உன்னோடு பேசியதற்காய்,
கல்லூரியில் சிலர் மிரட்டிய பொழுது
மனதுக்குள் கொஞ்சம்
கர்வம் தான்
கனவு முழுவதும்
கலைந்து தான் போனது!
நீ என்னோடு பேசுவதை
நிறுத்திய போது
இன்றைக்கும் உன்னை வலையுலகில்
தேடுகிறது என் கண்கள்
கல்லூரி முடிந்த பின்னும்!
