Saturday, September 13, 2008

நினைகவுளில் நீ!

என் கனவுகளின்
நினைவலையாய்
என் கண் முன்னே வந்தவளே!

உன்னால் என் நினைவுகளும்
இப்பொழுது கனவுகளாய்!

மற்ற யாரோடும் பேசாமல்
என்னோடு மட்டும்
பேசிய போது
உணர்ந்தேன் நம் காதலை!

உன்னோடு பேசியதற்காய்,
கல்லூரியில் சிலர் மிரட்டிய பொழுது
மனதுக்குள் கொஞ்சம்
கர்வம் தான்

கனவு முழுவதும்
கலைந்து தான் போனது!
நீ என்னோடு பேசுவதை
நிறுத்திய போது

இன்றைக்கும் உன்னை வலையுலகில்
தேடுகிறது என் கண்கள்
கல்லூரி முடிந்த பின்னும்!

Friday, September 12, 2008

திண்ணை(கவிதை)

என் நினைவுகளோடு
உறவாடிய என் இரண்டு திண்ணைகளும்
ஒன்றாகிப் போனது!
என் வீட்டின் வாசல் மாற்றும் பொழுது

வளர்ந்த பொழுது இருந்த
திண்ணையின் உருவம் மாறியதில்
மகிழ்ச்சியில்லை!

என் நினைவுகள் அனைத்தும் சங்கமிக்காமல்
இரண்டாகவே அலைகின்ற்ன!